இந்த ஆண்டு தீபாவளிக்கு யூத்துகளின் மத்தியில் நடிகை த்ரிஷாதான் பேசுபொருளாக இருக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொஞ்ச காலமாக நயன்தாரா ஃபீவரில் திரிந்த பல யூத்துகள் சமீபத்தில் வந்த 96 படத்திற்குப் பிறகு திடீரென த்ரிஷா ஆர்மியாகச் தங்களைப் பிரகடனம் செய்துகொள்வதை இணையங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக த்ரிஷா எனும் பெயரும் அவர் நடித்த ஜானு எனும் ரோலின் பெயரும்தான் டாக் ஆஃப் தி டவுனாக தற்போது இருந்துவருகிறது.
இப்படியாக ஒரே படத்தில் செம கம்பேக் கொடுத்துள்ள த்ரிஷாவும் ‘த்ரிஷா இல்லையினாதான் பாஸ் நயன்தாரா’ எனச் சொல்லாமல் சொல்லும்படி அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆகிவருகிறார். தற்போது ரஜினியுடன் அவர் நடிக்கும் பேட்ட த்ரிஷாவை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் த்ரிஷா ஆர்மிக்குக் குதூகலமூட்டும் விதமாகத் தற்போது அமைந்துள்ளது தீபாவளிக்குக் களமிறங்கியிருக்கும் புதிய ரக ஆடைகள். தீபாவளி ஆடைக்கும் த்ரிஷா ஆர்மிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
96 படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷா அதில் அணிந்திருக்கும் மஞ்சள் நிற சுடிதாரும் தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. கடைக்காரர்கள் அந்த ஆடைகளைத் தற்போது தீபாவளி ஸ்பெஷல் ஆடைகளாகத் தங்களின் கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
வழக்கமாக தீபாவளி என்றாலே ஏதேனும் ஒரு மாடல் அந்த ஆண்டின் ட்ரெண்டாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இம்முறை த்ரிஷாவின் இந்த சுடிதார்தான் யூத்துகளின் மத்தியில் ட்ரெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ஆடை ட்ரெண்டாக மாறியிருப்பதையொட்டி நடிகை த்ரிஷாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
Discussion about this post