ஏன் இயற்க்கையை விட்டு செயற்க்கைக்கு மாற ஆசைப்படுகிறீர்கள். என்றுமே இயற்க்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். இயற்க்கையானது மட்டுமே பல பலன்களை தரும் ஆனால் செயற்க்கை அவ்வாறு இல்லை. இந்த சோப்பில் அது இருக்கிறது, இது இருக்கிறது என பல பொய்களை சொல்லி விற்பனைசெய்கிறார்கள். நாமும் அதை நம்பி விட்டு அதுதான் சரியான சோப் என்று நம்பி விடுகிறோம். அந்த தவறை ஒரு போதும் செய்யாதீர்கள்.
வீட்டிலேயே சோப்பிற்கு பதிலாக தோலில் தேய்க்கப்படும் பொடியை ரெடி செய்து அதனை உபயோகியுங்கள். அப்படி நன்கு பலன் அளிக்கும் ஒரு ரெடிமேட் பொடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
கஸ்தூரி மஞ்சள்-1/2கிலோ
வெட்டிவேர்-10 கிராம்
கசகசா-50 கிராம்
பாதாம்- 100 கிராம்
பார்லி அரிசி-50 கிராம்
கார்போக அரிசி-50 கிராம்
முல்தானி மெட்டி-25 கிராம்
பூலாங்கிழங்கு-50 கிராம்
கடல் நுரை-25 கிராம்
வினாச்சி வேர்-10 கிராம்
திருநீர் பத்தினி-25 கிராம்
மரிக்கொழுந்து- 25 கிராம்
பன்னீர் ரோஸ்-50 கிராம்
துளசி -25 கிராம்
வேப்பிலை -10 கிராம்
இவை அனைத்தையும் நன்கு காயவைத்து மெக்ஷினில் கொடுத்து அரைத்து எடுத்து தண்ணிப்படாமல் காற்று புகாத பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கலாம். இல்லையேல் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாசிபயறினை வீட்டிலேயே அரைத்து உபயோகிக்கலாம். இதனுடன் காய வைத்த ஆரஞ்சு மற்றும் மாதுளையின்தோலினை காயவைத்து பொடித்து சேர்த்து கொள்ளலாம்.
மேலும் கடலை மாவு, பாசிப்பயறு அரத்து உபயொகிக்கலாம். மேலும் தோலில் எண்னெய் தேய்த்து இந்த பொடியினை தேய்த்து குளிப்பதால் வறட்சியை தவிர்க்கலாம்.
Discussion about this post