செல்போனால் வரும் கதிர்வீச்சினை சில முறையில் தவிர்க்கலாம். நம்மால் முயன்ற வரை செல்போன் உபயோகத்தினை தவிர்க்க வேண்டும். தேவையான போது மட்டும் உபயோகித்து கொண்டு மற்ற சமயத்தில் நேரில் பேசும் வழக்கத்தை கொள்ளவும்.
இதில் முக்கியமான விசியம் என்று சொன்னால் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் பெரியவர்களை விட சிறியவர்களையே அதிகம் பாதிக்கிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் செல்போன் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நமது மூளையோ நமது சுயநலத்திற்காக இதன் பாதிப்பை பொருட்படுத்தவில்லை ஆனால் நம்மை பாதிக்கிறது. எனவே நாமும் உடலுக்கு உதவி செய்ய வேண்டும். தூங்கும் நேரம் செல்போனை அருகில் வைக்க கூடாது. மீறி வைத்தால் மூளை பாதிக்கப்படும். செல்போனை ஜார்ஜ் செய்யும் போது அருகிலோ கையிலோ வைத்து உபயோகிக்ககூடாது. செல்போனில் ஜார்ஜ் செய்து முடித்த பின் சிவிட்சை ஆப் செய்ய வேண்டும். 100% ஜார்ஜ் ஆனதும் எடுக்க வேண்டும். அதிகமாக ஜார்ஜ் செய்ய கூடாது. செல்போனை குறைவான ஜார்ஜ் இருக்கும் போது உபயோகிக்கக் கூடாது. முக்கியமாக இரவு முழுவதும் இயர் போன் மாட்டிக்கொண்டு உறங்க கூடாது.
இவ்வாறு செய்வதனால் தான் தலைவலி,நரம்பியல் பிரச்சனை, மறதி, மணக்கவலை, பதட்டம் ஆகும்.இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட செல்போன் உபயோகித்தலை குறைக்க வேண்டும். மேலும் இதனால் உள்ள பிரச்சனையிலிருந்து விடுபட தினமும் உணவில் எள்ளினை சேர்த்து கொள்ளவும்.
இவற்றில் உள்ள பிரச்சனையை தவிர்க்க முறையான உணவும், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சியும் முதலியவை உதவும். செல்போனை தவிர்ப்போம் வளமான வாழ்வை வாழ்வோம்.
Discussion about this post