விஜய் ஹசாரே டிராபி 2018 தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். இத்தொடரில் அவர் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது பிடித்த கேட்ச் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல கேள்விகளை எழுப்பப்பியுள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் இடையேயான விஜய் ஹசாரே டிராபியின் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 19 வது ஓவரை வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட ஐதராபாத் அணியின் சந்தீப்பின் பேட்டின் முனையில் பட்டு ரோகித்தை நோக்கி சென்றது. பந்து தரையில் பட்டவாறு ரோகித் கேட்ச் பிடித்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த தீர்ப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ரீப்ளேயில் பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது.
Discussion about this post