பாலியல் புகாருக்கு ஆளான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து மத்திய மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்தடுத்து பெண்கள் புகார் கூறியதால் எம்.ஜே.அக்பர் பதவியை ராஜினாமா செய்தார். எம்.ஜே.அக்பர் மீது 20 பெண்கள் வரை பாலியல் புகார் கூறியிருந்தனர். தம்மீதான புகாரை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார். தம்மீதான புகாரை பதவியில் இருந்து விலகி எதிர்கொள்வதே சரி என்று அவர் கூறினார்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீ டூ’ என்ற பெயரில் டிவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீ டூ’ ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலையில் ‘மீ டூ’ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பரும் ஆளாகி உள்ளார்.
எம்.ஜே.அக்பர் முன்பு பத்திரிகையாளராக இருந்தவர். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளருக்கு எதிராக மானநஷ்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். பாலியல் புகார் கூறியவர்கள் மீது அக்பர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post