இப்பொழுது கடையில் கிடைக்கும் விலையுயர்ந்த உப்பை விட உப்பளத்தில் இருந்து கிடைக்கும் சாதாரண கல் உப்பு சிறந்தது. இதனை தலைவலி அல்லது நீர்கோர்த்தி தலைவலி என்றால் தண்ணீர் சூடுபடுத்தி 2 கிராம்பு மற்றும் கல் உப்பு சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல பயன் கிடைக்கும். அல்லது தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதில் கல் உப்பு சேர்த்து நெற்றியில் தேய்த்தால் நீர் இறங்கும். வலி நீங்கும்.
நமது கால் கைகளில் எந்த விதமான வலி ஏற்பட்டாலும் சூடு தன்னிரில் ஒத்தடம் அல்லது ஊற்றினால் வலி சரியாகும். இரத்தக்கட்டிற்கு மிகவும் பயனுள்ளது. புண் இருந்தால் சாதாரண தன்னீர் அல்லது மிதமான சூட்டில் கல் உப்பு போட்டு ஊற்றலாம். காலில் உள்ள வெடிப்பு போவதற்கும் அதில் உள்ள கிருமிகள் நீங்குவதற்கும் சுடு நீரில் கல் உப்பு போட்டு காலினை அரை மணி நேரம் வைக்கலாம்.
ஐயோடின் உப்புக்கள் பாக்கெட்டில் விற்கப்படுகின்றன. அவற்றில் ஐயோடின் அளவு எவ்வளவு இருக்கும் என்பது அறியாது. இதனால் அயோடின் அளவு அதிகமானால் ஹைப்பர் தைராய்டு வரக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே கல் உப்பே நல்லது. அயோடின் தான் நமது தைராய்டு கிளாண்ட்டை நலமாக வைக்க உதவுகிறது. அயோடின் அளவு குறைந்தால் ஹைப்போ தைராய்டு என்பர்.
”உப்பில்லா பண்டம் குப்பையிலே” உணவில் உப்பு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. உணவில் பாக்கெட் உப்பினை விட கல் உப்பினை பயன்படுத்தினால் உடல் நலம் பெறும்
Discussion about this post