தேன் ஒரு அற்புதமான மருந்து. கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் காணப்படும் ஒன்று தான் தேன். முக்கியமாக குழந்தைகள் உள்ள வீட்டில் கட்டாயம் தேன் காணப்படும். தேன் பல விதமான நோய்களையும் விரட்டியடிக்கும் அற்புத சக்தி உள்ளது. அப்படிப்பட்ட தேனை பல விதமாக கலந்து சாப்பிட்டால் பல விதமான நோய்களும் பறந்து போய் விடும்.
பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய் புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தச் சோகை போகும்.
தேனில் சுன்னாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
தேனை அருந்துவதினால் உடல்நலம் பெறுவதோடு உடல் அழகும் பெறலாம். மிகவும் அருமையான சுவையுடைய தேனை பல விதங்களில் உபயோகித்து பல பலன்கள் பெறுங்கள்.
Discussion about this post