வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படம் இன்று வெளியாகியுள்ளது. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வடசென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்த போது, படத்தை பார்த்த அந்த குழுவினர் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதோடு வடசென்னைக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பின்னர், சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை வெட்டி நீக்கினார்கள். சில வசனங்கள் ஆபாசமாக இருப்பதாக கூறி அவற்றை கேட்காதபடி செய்தனர். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கி உள்ளனர். இதுபோல் தி.மு.க பற்றிய சர்ச்சை வசனத்தையும் நீக்கி விட்டு படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
Discussion about this post