தமிழ் சினிமாவில் தற்போது போட்டியில் இருப்பவர்கள் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன். இவர்களில் விஜய் சேதுபதி 25-வது படத்தை தொட்டுவிட்டார். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சிவகார்த்திகேயன், கலந்து கொண்டு விஜய் சேதுபதிக்கு ஆச்சரியம் அளித்தார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், 25 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு வாழ்த்துச் சொல்ல வந்ததாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Discussion about this post