நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு பற்றிப் பெருமையாகக் பேசியிருந்தார். இதனால், திவ்யா சத்யராஜ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இதற்கு பதிலளித்த திவ்யா சத்யராஜ், தான் மனதளவில் கம்யூனிஸ்ட் என்றும் கம்யூனிஸம் தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும் எனவும் கூறினார்.
மேலும், எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும் என்றும் ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் எனவும் திவ்யா சத்யராஜ் பெருமையுடன் தெரிவித்தார். சாதிகளற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post