பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரூ.23,045 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றுவதை வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தவிர்த்தது. இதன் காரணமாக, மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்நிறுவனங்கள் உரிமத் தொகை, அலைக்கற்றைக் கட்டணம் என மொத்தம் ரூ.92,000 கோடி செல்லுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம், செப்டருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் ரூ.23,045 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய பணத்தை முழுமையாக செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் காரணமாக, நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டதாக ஏர்டெல் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் மட்டும் ரூ.28,450 கோடி வருவாயை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post