பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ, தளபதி விஜய் வைத்து 2 மெகா ஹிட் படங்களை இயக்கினார். அவர் கடைசியாக இயக்கி மெர்சல், அரசியல் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்ற நிலையில், சில விமர்சனங்களும் எழுந்தன. அதாவது, பழைய படங்களில் இருந்து காட்சிகளை சுடுவதில் இயக்குநர் கெட்டிக்காரர் என்று ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தனர். ஆனாலும், என்னதான் பழைய படங்களின் காட்சிகளை அட்லீ சுட்டாலும், ஹிட் கொடுத்துவிடுகிறாரே என்று ரசிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அவர் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது.
இந்நிலையில், 3வது முறையாக தளபதி விஜயை இயக்க உள்ளார். அதற்காக, இயக்குநர் அட்லீ, படத்திற்கான திரைக்கதையை எழுத வெளிநாடு செல்ல வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டாராம். ஆனால் தயாரிப்பாளரோ, வெளிநாடு வேண்டாம், தனக்கு சொந்தமான கடற்கரை வீட்டில் தங்கி கதை எழுதும்படி கூறிவிட்டாராம். இதனால் ஏமாற்றமான இயக்குனர் அட்லீ, என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.
Discussion about this post