விஜய்யுடன் செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் யுவராணி. அவ்வப்போது படங்கள் நடித்து வரும் அவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், செந்தூரபாண்டி படப்பிடிப்பின் போது விஜய்யிடம் ஒரு கல்லூரி மாணவனாக தான் நடந்து கொண்டதாகவும் ஆனால் இப்போது அப்படியே மாறிவிட்டார் எனவும் கூறினார். விஜய் எப்போதும் எனக்கு நல்ல நண்பர் என்றும் நாங்கள், நல்லா பழகியிருக்கோம் எனவும் யுவராணி தெரிவித்தார். தற்போது, விஜயின் வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டிருப்பதாக கூறிய யுவராணி, தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
Discussion about this post