பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள் மீ டு ஹேஷ் டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். மற்றத்துறைகளைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ, சிமானத்துறையினர் இதனால் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்த நடிகை ரகுல் பிரீத்சிங் தற்போது பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “பெண்களுக்கு பாலியல் துன்பம் கொடுப்பது வேறு, பெண்களிடம் தவறாக நடப்பதுவேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எது நடந்தது, எது நடக்கவில்லை என்பதை எப்படி பிரித்து பார்க்க முடியும், சிலர் மிகைப்படுத்தி கூறிவிட வாய்ப்புள்ளது.
பெண்களுக்குஇதுபோன்ற கொடுமைகள் பல ஆண்டகளாக நடைபெற்று வருகிறது. பல சம்பவங்கள் இதுபோன்று நடப்பதால் அச்சம்பவங்கள் நாளடைவில் நீர்த்து போய் விடுகிறது. தற்போது பெண்கள் தைரியமாக வெளியே வந்து இதுகுறித்து பேசி வருவது பாராட்டுக்குரியது. இம்முறை இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
மீடு பெரியஅளவில்வரவேற்பை பெற்றிருப்பது சந்தோஷமளிக்கிறது. பரவலாக இதுபோன்ற சம்பங்கள் சினிமாதுறையில் நடந்தாலும், என் வாழ்க்கையில்இதுபோன்ற பாலியல் தொல்லை ஏற்பட்டதில்லை.
மனதிற்கு இதமான ஒரே விஷயம் என்னவெனில், மக்கள் தற்போது காதுகொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பணி செய்யும் இடங்களில் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே நேரத்தில் இந்த வாய்ப்பை பெண்கள் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Discussion about this post