பாலியல்துன்புறுத்தல் பல்வேறு நடிகைகளும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில், நடிகை டாப்ஸி வேறுவிதமாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களில்சம்பந்தப்பட்டிருக்கும் பெரியமனிதர்களை விட அவர்கள் எப்படியெல்லாம் பாலியல்தொல்லை கொடுத்துள்ளார்கள் என்பது தான் என்னை நிலைகுலைய வைத்துள்ளது என மிரட்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தன் மனதை முற்றிலுமாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகை டாப்சி கூறும் போது, இப்படியெல்லாம் கூட பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருக்கிறதா? என அஞ்சும் அளவுக்கு இந்தபாலியல் சீண்டல்கள் அமைந்திருக்கின்றன. இந்தபயங்கரமான சம்பவங்கள் தற்போது வெளிப்பட்டிருந்தாலும், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக தோன்றுகிறது.
இன்னும் பல விவரங்களை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு டாப்ஸி கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்படங்களில் தலைகாட்டாமல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்த டாப்ஸி தற்போது ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தின் மூலம் டாப்ஸி ரீஎண்ட்ரி ஆவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post