* ’மீ டூ’ விவகாரத்தில் நடிகர் ஜான் விஜய் மீதும் பழி வந்து சேர்ந்திருக்கிறது. கடந்த 2014-ம் வருடம் இரவில் தனக்கு போன் செய்து பாலியல் துன்புறத்தல் ரீதியில் பேசினார் அவர் என்று சின்னத்திரை நடிகை ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.
ரஜினியை அதிரவைத்திருக்கிறது இந்த குற்றச்சாட்டு. காரணம்? கபாலி படத்தில் ரஜினியின் தோழனாக கிட்டத்தட்ட படம் முழுக்கவே நடித்திருந்தார் ஜான். அந்த வகையில் ரஜினியின் நெருங்கிய நலம் விரும்பிகள் பட்டியலில் அவருக்கும் இடமிருந்தது. இந்த பிரச்னை பற்றி ரஜினி இதுவரையில் ஜானிடம் பேசவில்லை, ஆனால் பேசினால் எப்படி விளக்குவது? என்பதில்தான் ஜானுக்கும் சங்கடமே.
* பெண்களின் பாதுகாப்பிற்காக கமல்ஹாசன் ஒரு செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கமலுக்கும் பெண்களுக்குமான தொடர்புகள், சில பெண்களுடன் நெருங்கிப் பழகி அவர்களை அவர் பிரிந்தது, கமலின் விவாகரத்துகள்! என பல விஷயங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான கடும் விமர்சனங்கள் றெக்கை கட்ட துவங்கியுள்ளன.
* ’96’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் கூட அப்பட ரிலீஸுக்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்திருக்கிறார் அல்லவா விஜய் சேதுபதி, அந்த விவகாரம் அவரது கையை கடிக்கிறது. அதனால் இனி படங்களுக்காக பணத்தை இறக்கும் முயற்சியை நிறுத்தி வைக்கப்போகிறாராம். ஓரளவு சம்பாதித்துவிட்டு மீண்டும் இப்படி உதவலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.
* விஸ்வாசத்துக்கு அடுத்து தீரன் விநோத்தின் ‘பிங்க்’ ரீமேக்கில் தல நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இளம் இயக்குநர்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் முருகதாஸ் இருந்தபோது கைகொடுத்து தூக்கிவிட்டவர் அஜித். ஆனால் முருகதாஸோ தொடர்ந்து விஜய்யை வைத்தே ஹிட் அடித்து வருகிறார். இது பெரும் விமர்சனமாகி இருப்பதால் தல-க்காகவே ஸ்பெஷல் ஸ்டோரி ஒன்றை ஸ்கெட்ச் செய்து முடித்துவிட்டார். தல -க்கும் அது ஓ.கே. அநேகமாக இதில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார் என்கிறார்கள்.
* காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் மிக்ஸ்ட் ரிவியூ நிவினுக்கு சங்கடத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் கேமியோ மோகன்லாலின் பாத்திரம் கிளாப்ஸை அள்ளிவிட்டது. இந்த சந்தோஷத்துடனே நடிகர் பிரித்விராஜ் இயக்கும் ‘லூசிபர்’ படத்தில் ஒன்றிவிட்டார்.
Discussion about this post