ஏக வருத்தத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்! காரணம்?…தொடர்ந்து அவரது படங்கள் நெகடீவ் ரிசல்ட்டை சந்திப்பதால்தான்.
உண்மையா? என்றால் அது உண்மைதான். ரஜினி முருகன், காக்கிச்சட்டை ரெமோ, வேலைக்காரன் இவை நான்குமே ரிலீஸான அத்தனை பகுதிகளிலும் ஹிட்! என்ற பெயரை எடுக்கவில்லை. கோயமுத்தூர் மண்டல பகுதியில் மட்டும் ரெமோ ஓரளவு வசூலை கொடுத்தது. மற்றபடி வருத்தப்படாத வாலிபர் சங்க எதிர்பார்ப்பில் ரஜினி முருகனுக்கு வந்து கன்னாபின்னாவென தலையிலடித்து சென்றவர்களும், அவர்களின் அட்வைஸால் தியேட்டருக்கு வராமல் நின்றவர்களும் அப்படத்தின் வசூலுக்கு எதிரியாக அமைந்தனர்.
தனி ஒருவன்! மரண மாஸ் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் ஜெயம் ராஜாவிடம் பெரிதாய் எதிர்பார்த்தது தமிழ் சினிமா ரசிக உலகம். அதிலும் சிவகார்த்தி – நயன் தாரா என்று பெரிய காம்போ இருந்ததினால் எதிர்ப்பார்ப்பு ட்ரிபிளாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ சித்தாந்தம் தாங்கி, தொழிலாளர் பிரச்னையோடு கார்ப்பரேட் நிறுவனங்களின் கயமைத்தனம் என்று பிரச்சார நெடியுடன் வந்த அந்தப் படம் எதிர்மறை ரிவியூவைத்தான் பெற்றது.
அடர்த்தியான கதையம்சமுடைய படம் நமக்கு ஒத்துவராது! என்று மீண்டும் பொன்ராமின் கைகளுக்குள் புகுந்த சிவகார்த்தி, சீமராஜாவை பெரிதாய் எதிர்பார்த்தார்.
ஆனால் அது மிகப்பெரிய அடியாய் அமைந்துவிட்டது அவருக்கு. இந்தப் படம் எடுக்கப்படும் போதே அதன் போக்கு சுவையாக இல்லை என்பதை சிவகார்த்தி புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஏமாந்துவிட்டார். இமானும் இந்த முறை ஏமாற்றிவிட்டார். சமந்தா, கேமியோ கீர்த்தி, சிம்ரன் என்று பெரிய காம்போ இருந்தும் படம் எந்த வகையிலும் எடுபடவில்லை.
இப்படி தோல்விகள் துரத்துவதால் பெரும் துயரில் இருக்கிறார் சிவா தம்பி. இதற்கிடையில் தனது சொந்த தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கனா’வும் அவருக்கு லாபமா/ நஷ்டமா எனும் பயத்தை கண்ணில் காட்டுகிறது. ஆக சரிவுகளிலிருந்து உடனடியாக மீள வேண்டுமென்றால் கட்டாய வெற்றி அவருக்கு அவசியம். அதனால் மீண்டும் பொன்ராமின் கூட்டணியில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுத்துவிடலாமா என்று யோசித்தார்!
அதற்கு வெகுவாக முட்டுக்கட்டை போட்டிருக்கும் அவரது நண்பர்கள் ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு பொன்ராமை தள்ளிவை. இன்னும் பல வருடங்களுக்கு சூரியை ஒதுக்கி வை. நீ முன்னேறிடுவ!’ என்றிருக்கிறார்கள்.
என்ன செய்யப்போகிறார் சிவா?
Discussion about this post