அது செம்மத்தியான காம்போ பாஸ்! விஷால், லிங்கு, யுவன் இவர்களுடன் க்யூட்டோ க்யூட் மீரா ஜாஸ்மின். யெஸ் ’சண்டக்கோழி!’தான். தமிழ் சினிமாவின் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படங்களின் லிஸ்டில் தவிர்க்க முடியாத படமிது. அதன் சீக்வெல் விடிஞ்சா ரிலீஸ்.
மீராவை தவிர அல்மோஸ்ட் அந்த பழைய காம்போ இதிலும் இருக்கிறது. மீரா இடத்தில் ஆன் கோயிங் அழகி கீர்த்தி சுரேஷ்! ‘செம்பருத்தி’ எனும் கேரக்டரில் கலக்கி எடுத்திருக்கிறார்.
இது போக இரும்பு மரம் போல் அதே ராஜ்கிரண், யுவனின் துள்ளல் இசை என்று எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ச.கோ – 2வில் இன்னொரு சர்ப்பரைஸ், வேறு யாரு நம்ம வரு!தான். விஷாலின் ரியல் நாயகி என்று சில காலங்களுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட வரலட்சுமி சரத்குமார், இந்தப் படத்தில் மரண மாஸ் நெகடீவ் ரோல் செய்திருக்கிறார்.
இந்த பட அனுபவம் உள்ளிட்ட பர்ஷனல் விஷயங்களை பற்றி இன்று அழகு வாய் திறந்திருக்கும் வரலெட்சுமி “விஷாலுக்கு நான் ரியல் லைஃப்ல ப்ரெண்டுதான், ஆனா இந்த ரீல்ல (ச.கோ. 2) மட்டும் வில்லி. படத்தோட சில ஸ்டில்ஸ்ல என்னை நானே பார்க்கிறப்ப பயந்துட்டேன், அவ்ளோ டெரரா இருக்கேன்.
கீர்த்தி – விஷாலோட டூயட் ஒண்ணை பார்த்தேன். அவங்களுக்குள்ளே கெமிஸ்ட்ரி செமத்தியா ஒர்க் அவுட் ஆகியிருக்குது. ஏதோ ரியல் லைஃப் ஜோடி மாதிரி இருக்கிறாங்க.
விஷால் எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறார்ன்னு எல்லாரை மாதிரி நானும் கேட்டுட்டு இருக்கேன். ஆனா நடிகர் சங்க பில்டிங்கை காரணம் காட்டி தள்ளிப்போடுறான். அவன் எப்போ கட்டிடத்தை கட்டி முடிச்சு, கல்யாணத்த பண்ணப்போறான். வயசாயிடுச்சுன்னா பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்டா!ன்னு சொல்லியிருக்கேன்.” என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓப்பனாய் வெளுத்து கட்டியிருக்குது பொண்ணு.
அதெல்லாம் சரி, அந்த ‘வி இஸ் இன் லவ் வித் வி’ அப்படின்னு சில காலத்துக்கு முன்னாடி சொல்லிட்டிருந்தாங்களே அதெல்லாம் பொய்யா வரு?!
Discussion about this post