
இருமல் என்றாலே பலபேர் தேடிப்போவது இருமல் ஸிரப்பைதான். சளியும் சேர்ந்து இருமல் வந்தால் சோர்ந்து போய் மருத்துவரைதான் பார்க்க வேண்டுமா? இயற்க்கையான வழிகள் இருக்கும் போது வேறு வழிகளை எல்லாம் தவிர்க்கலாமே. நம் வீட்டிலேயே இருக்கும் பால், மஞ்சள், மிளகையே நாடுவோம்.
நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் வீட்டில் அடிக்கடி இருமிக் கொண்டு இருப்பவர்களுக்கும் அருமருந்துதான் மஞ்சள், பால், மற்றும் மிளகு. மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. உடலில் உருவாகும் நோய் கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் கொண்டது.
அதே போல் மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாயுவுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது இருமல், சளி சரியாகி விடும்.
ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூளை சேர்த்து அருந்தி வர வேண்டும். குறைந்தது ஒரு வாரத்திற்காவது இரவில் அருந்தி வர வேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி இருமல் பறந்தோடி விடும்.
Discussion about this post