தளபதி விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அதே சமயம் அட்லீ மீண்டும் மீண்டும் காப்பி அடித்த கதைகளையே கொண்டுவருவதால் கடும் அப்செட்டில் இருக்கிறா விஜய் என்றும் அரசல் புரசலாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் அமீர் விஜய்க்காக இரண்டு கதைகள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதில் ஒன்று குடும்பப்படமாம். விஜய் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பதால் மீண்டும் காவலன் மாதிரியான சாஃப் சப்ஜெக்டில் நடிப்பாரா என தெரியவில்லை. எனவே அவருக்கு ஏற்ற மாதிரியு ஆக்ஷன் கதையும் என்னிடம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அமீர்.
Discussion about this post