திரைத்துறையில் எந்த வித பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களில் , விஜய் சேதுபதியும் ஒருவர். சினிமா மீது இவர் கொண்டிருக்கும் ஆர்வத்தால் திறமையுடன் இருக்கும் இயக்குனர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்யும் விதமாக பல செயல்களை இவர் செய்திருக்கிறார்.தற்போது இவர் நடிப்பில் ’96’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் கூட அப்செட்டில் தான் இருக்கிறார் விஜய் சேதுபதி, அப்பட ரிலீஸுக்காக மிகப்பெரிய தொகையை ஆரம்பத்திலேயே செலவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி, அந்த விவகாரம் இப்போது அவரது கையை கடிக்கிறது. அதனால் இனி படங்களுக்காக பணத்தை இறக்கும் முயற்சியை நிறுத்தி வைக்கப்போகிறாராம். ஓரளவு சம்பாதித்துவிட்டு மீண்டும் இப்படி உதவலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. அது சரி தனக்கு போகத்தானே தானமும் தர்மமும்.
Discussion about this post