வைரல் செய்திகள்
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
No Result
View All Result
வைரல் செய்திகள்
No Result
View All Result

செக்ஸ் சில்மிஷ சம்பவம் நடந்தபோது பெண்கள் பேசாததற்குக் காரணம் என்ன? அதிரவைக்கும் கேள்விகளும்… அசர வைக்கும் பதில்களும்.

October 18, 2018
in வைரல்ஸ்
செக்ஸ் சில்மிஷ சம்பவம் நடந்தபோது பெண்கள் பேசாததற்குக் காரணம் என்ன? அதிரவைக்கும் கேள்விகளும்… அசர வைக்கும் பதில்களும்.
Share on FacebookShare on Twitter

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் தற்போது வெளியே தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காக 2006ஆம் ஆண்டு ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் சமூகச் செயற்பாட்டாளர் தரானா புர்க், நியூயார்க்கில் மீ டூ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் 2017இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

ரயா சர்கார் என்ற சட்டப்படிப்பு மாணவி கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் தொல்லைகளைப் பட்டியலிட்டதிலிருந்து இந்தியாவில் மீ டூ அறிமுகமானது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அப்போது, விவாதங்களும் உரையாடல்களும் சமூக ஊடகங்களில் நடைபெற்றன.

ஒரு வருடத்துக்குப் பிறகு மீண்டும் மீ டூ விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது சினிமா, அரசியல், பத்திரிகைகளில் பணிபுரியும் சில ஆண்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017இல் பொது மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர்கள் மீது கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தற்போது அந்தக் கேள்விகளை மீண்டும் உரத்தக் குரலில் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

எட்டுக் கேள்விகள்

சம்பவம் நடந்தபோது பெண் பேசாததற்குக் காரணம்?

நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது மீ டூ விவகாரத்தில் புதிய முறையைத் தூண்டியது. 2008ஆம் ஆண்டே இவ்விவகாரம் தொடர்பாக பேசியிருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதே தனுஸ்ரீ இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எனினும் இது தொடர்பாக ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தனுஸ்ரீ கார் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் (நானா படேகர் உத்தரவின் பேரில்) இருந்தாலும், அவரது குற்றச்சாட்டு “அபத்தமானது” என்று நிராகரிக்கப்பட்டது.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றாலும்கூடப் பெண்கள் ஏன் அதை வெளியே சொல்லவில்லை என்பதை தனுஸ்ரீயின் அனுபவம் காட்டுகிறது. அவர்களை யாரும் நம்புவதில்லை. தொந்தரவு செய்பவர்களாகக் கருதுகின்றனர். இந்த ஆணாதிக்க சமூகத்தில் தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியில் சொல்வதற்காகப் பெண்கள் கொடுக்கும் விலை என்பது அவர்களின் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புகழை இழப்பதுதான்.

அவள் ஏன் இப்போது பேசுகிறாள்?

மீ டூ இயக்கம் என்பது சகோதரிகளுக்கானது. இந்த இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பப்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர்களின் கதைகள் உணர்வுபூர்வமாகக் கேட்கப்படுகின்றன. இதனாலேயே சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பெண்கள் அவர்களுக்கு நேர்ந்த வன்முறைகள் தொடர்பாகப் பேச தற்போது தைரியமாக முன் வருகின்றனர். இது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பகிர்ந்துகொள்ளவும், அந்தச் சம்பவத்தில் இருந்து வெளிவருவதற்கும் உதவுவது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபருடன் வேலை செய்யும் மற்ற பெண்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் இது அமைகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர் பெயரை வெளியிடுகையில், பெண் ஏன் தனது பெயரை வெளியிடுவதில்லை?

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண், பாதிக்கப்படும் பெண்ணின் உயரதிகாரியாக இருக்கும்போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு விதங்களில் தொல்லை கொடுக்கலாம். மீ டூ இயக்கத்தில் பெண்கள் பதிவிடும் கதைகளை வைத்துப் பார்த்தால், அவர்களைத் தனிமைப்படுத்துவது, பதவி உயர்வுகளைத் தடுப்பது, அவர்களின் வளர்ச்சியைத் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்படும் பெண்கள் நேரடியாகக் குற்றம்சாட்டும்போது அவர்கள் வேலை இழக்கவும் நேரிடுகிறது.

பாலியல் அத்துமீறலுக்கு ஆளானவர்கள் அது மோசமானது என்று தெரிந்தும் அதனை விட்டு விலகிச் செல்லாதது ஏன்?

இந்த மாதிரியான முடிவுகளை எடுக்கக்கூடிய சுதந்திரமும் பொருளாதார பாதுகாப்பும் எல்லாப் பெண்களுக்கும் அமைந்துவிடாது. பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டால், இதே பிரச்சினை வேறொரு புதிய பணியிடத்தில் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் என்ன? தொழில் வளர்ச்சி நெட்வொர்க்கிங் சார்ந்தது. அனைத்து இடங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்டியுள்ள ஆணாதிக்கவாதிகள் பெண்கள் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி மற்ற இடங்களுக்குச் சென்றாலும்கூட அவர்களது தொழில் வளர்ச்சியை நிறுத்திவிட முடியும்.

ஆதாரம்?

மீ டூ இயக்கத்தின் வழியாகப் பல பெண்களால் உரையாடல்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்கள் அனுப்பப்படுகின்றன. இது பாலியல் துன்புறுத்தல்கள்தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு பெண் குறிப்பிட்ட அந்த ஆணை பற்றி பேசும்போது, மற்றவர்களும் அவரைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றனர்.

சில சமயங்களில், அந்தச் சம்பவம் அறிந்த மற்றவர்களிடமிருந்து, என்ன நடந்தது என்பதற்கான சாட்சியங்கள் பெறப்படுகின்றன. முன்னதாக தனுஸ்ரீ பிரச்சினையில், பத்திரிகையாளர் ஜான்சி செகூரியா அதன் தொடர் நிகழ்வுகளை உறுதி செய்தார். ஒரு முறையான அறிக்கையை ஏஐபி வெளியிட்டது.

அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் இருந்தன என்பதைத் தெரியுமென்று ஒப்புக்கொண்டுள்ளது. பந்தான் ஃபிலிம்ஸ் பங்குதாரர்களில் ஒருவரான விகாஷ் பாஹல் ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததை அறிந்து இயக்குநர் அனுராக் கஷ்யப் பந்தான் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைக் கலைத்தார். இதுபோன்ற பெரும்பாலான பிரச்சினைகளில், அதைப்பற்றிய செய்திகள் பொதுவெளிக்கு வராமல் அந்த நிறுவனத்தால் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லைகள் நிகழ்ந்த பின்னர் அந்தப் பெண் குற்றம் புரிந்தவரிடமிருந்து தனிமைப்படுகிறார். பின்னர் அதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் அந்தப் பெண்ணுக்கு கிடைப்பதில்லை. ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, மீ டூ இயக்கமானது பெண்களுக்கு முதல்கட்டமாக ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. மருத்துவச் சான்றுகள் ஆதாரங்களைக் கொண்டு ஆதாரபூர்வமாக நிரூபித்தால் மட்டுமே சமூகத்தையோ அல்லது சட்ட அமைப்புகளையோ நம்பவைக்க முடியும்.

இது ஆண்களுக்கு நியாயமற்றதா?

பாலியல் புகார்களுக்கு ஆளான ஆண்கள் எப்போதாவதுதான் அதற்கான விலையைத் தருகிறார்கள். பல்வேறு தொழில் துறைகளில் இது மாதிரியான ஆண்களின் நடத்தை குறித்த விழிப்புணர்வுடன், அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். எது எப்படி ஆயினும் ஆண்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. காரணம், அதிகாரமிக்க நிலை மற்றும் தொழில்துறை அல்லது நிறுவனத்தின் பொக்கிஷமாக அவர்கள் கருதப்படுவது. பொதுவாக ஆண்களின் நடத்தையைவிட அவர்களின் திறமைதான் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. ஆண்கள் என்ற விதத்தில் மன்னிப்பு வழங்கப்படுகிறது. இந்த மாதிரியான ஆண்களால் சில பெண்கள் வேலையை விட்டுச் செல்வது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது நேர்மையான முறையில் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும். பல நிறுவனங்களில் புகார் குழு அமைக்கப்படுவதில்லை. இதற்கான சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 பெண்களாவது பணி புரிய வேண்டும் அதை மீறி சில நிறுவனங்களில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அந்தக் குழுவில் ஒருவராகவோ அல்லது அந்தக் குழுவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கு உடையவராகவோ சம்பந்தப்பட்ட நபர் இருக்கிறார். இந்த விசாரணையின் சுமைகளை, முடிவில் பாதிக்கப்பட்டவரே எதிர்கொள்கிறார். குற்றம்சாட்டப்பட்ட நபரின் அதிகாரத்தால் எந்த விதத்திலும் அவர் பாதிக்கப்படுவதில்லை. குற்றப் புகார் பதிவு செய்யப்பட்டாலும்கூட, அதன் நடைமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாகத்தான் உள்ளது.

தவறான குற்றச்சாட்டுகளின் பாதிப்பு என்ன?

மீ டூ இயக்கம் எந்த ஒரு நிறுவனத்தாலும் உருவாக்கப்பட்டதல்ல. பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெளியே பேசுவதற்கு மற்ற பெண்களால் ஊக்கமளிக்கப்படுகின்ற ஒரு நடைமுறையாகும். ஆனால், இதில் ஒரு தவறான குற்றச்சாட்டு உருவாக்கப்படக்கூடிய சாத்தியம் நிச்சயமாக உள்ளது. எனினும் நாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. எனவே, தவறான குற்றச்சாட்டுக்கான சாத்தியம் குறைவு. தவறே இல்லாமல் ஒரு குற்றச்சாட்டைப் பதிவிட்டால் அது அவர்களின் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவத்தைப் பொதுவெளியில் உள்ள நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் சொல்லும்போது, அந்தச் சம்பவம் பெயர் குறிப்பிடாதவகையில் வெளிவருகிறது. சட்ட மாணவி ரயா சர்கார் ஆதாரங்கள் வாயிலாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று பேசி பட்டியலைத் தயாரித்தார். அதுபோன்று பத்திரிகையாளர் சந்தியா மேனன் மற்றும் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் ஒரு சில நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இது பாலியல் குற்றச்சாட்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் குற்றம்சாட்டப்படும் நபர் சமூக வலைதளம் அல்லது நீதிமன்றத்தின் வாயிலாகவோ சவால் விடுக்கலாம்.

ஊடகங்கள் இதில் ஆர்வம் செலுத்துவது ஏன்?

மீ டூ இயக்கம் உலகம் முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் போன்றவர்களை அசைக்கக் கூட முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது பெண்கள் அவர்களை எதிர்த்து பேசத் தொடங்கியுள்ளனர். தற்போதுள்ள நடைமுறைகள் செயல்படாததால், புதிய யோசனைகள் தேவைப்படுகிறது. இது முன்னெப்போதும் இல்லாத முறை, உலகெங்கிலும் உள்ள பெண்களை இணைப்பது மற்றும் சுதந்திரமாக பேசுவதற்குத் தொழில்நுட்பம் உதவுகிறது. ஊடகங்கள் வரலாற்றின் இந்தத் திருப்புமுனையை ஆவணப்படுத்த வேண்டும். பெண்கள் எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது.

ShareTweetSendPinShare

Related Posts

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்
வைரல்ஸ்

அதிக உழைக்கும் ஆண்களே பாத வெடிப்பால் அவதியா? இதோ எளிய வைத்தியம்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?
வைரல்ஸ்

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…
வைரல்ஸ்

மூன்றாவது நாளாக தொடரும் வன்முரை வெறியாட்டம்… பலி எண்ணிக்கை 10…

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!
வைரல்ஸ்

தண்டு கீரை வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க… உந்தலுக்கு அந்த பிரச்சனையே வராது!!

நித்தியானந்தாவிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி தாருங்கள் – கதறும் பெற்றோர்கள்
வைரல்ஸ்

நித்தி சிக்குவாரா? பக்தர்களே கைது என்றால் பதறாதீர்கள்..

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!
வைரல்ஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்: வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம்!

Discussion about this post

Like Us on Facebook

LATEST

இது கொஞ்சம் சீரியஸ் மேட்டரு… ஏரியாவுக்கு யாரு ரூட்டு தல? பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொலைவெறி மோதல்!!

மனைவியின் தலை தனியாக, உடல் தனியாக வெட்டி வைத்த கணவன்… சகோ படத்தை மிஞ்சிய கொலை!!

தூங்கிக்கொண்டிருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி!!

மொத்த நோய்களையும் ஒத்தையாய் விரட்டியடிக்கும் ஒத்த நெல்லிக்காய்!

உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?

வர்ற தேர்தலுக்கு தினகரனின் பயங்கர மாஸ் ஸ்கெட்ச்

உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள்: நன்மைகள் ஏராளம்…

விஷ வைரஸையும், வியாதிகளையும் விரட்டியடிக்கும் நிவாரணி நிலவேம்பு!

தும்மலுடன் மூக்கு வடிதல் அதிகமா இருக்கா? இத செய்ங்க சரியாயிடும்

கொரோனா’ காலர் ட்யூன் குரல் … சொந்தக்காரர் இவர் தான்….

மதுபோதையில் சிறுமியை கதற கதற கற்பழித்து கொன்ற கும்பல்!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?

’அந்த மனசுதான் சார் கடவுள்’… தன்னுடன் நடித்த நடிகரின் மருத்துவ செலவை ஏற்ற விஜய் சேதுபதி!

உங்க ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள்…. அஜித்தை கோபத்துடன் டிவிட்டரில் கேள்வி எழுப்பிய நடிகை !

எனக்கு இதை சமைத்து கொடு…மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

அரசு பள்ளி ஆசிரியரின் காம வெறி…. கதறிய இளம் மாணவிகள்!!

கற்பழிப்பு கேஸ் போட்டுட்டாங்கலே…. வேதனையில் 55 வயது முதியவர் எடுத்த விபரீதம்!!

10,999 விலையில் அசத்தலாக வெளிவரவுள்ள SAMSUNG GALAXY M21…

கள்ளக்காதலனோடு சேர்ந்து இரண்டாவது கணவனை கொன்ற மனைவி!!

  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்
© 2019 வைரஸ் செய்தி
No Result
View All Result
  • Home
  • வைரல்ஸ்
  • அரசியல்
  • விளையாட்டு
  • லைப் ஸ்டைல்
  • திரையரங்கம்
  • வணிகம்

© 2019 வைரஸ் செய்தி