காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி காலமானார். அவருக்கு வயது 93.
1925ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ம் தேதி பிறந்த நாராயணன் தத் திவாரி, 1984 – 85,1988 – 89 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்திலும, 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராகவும் பதவி வகித்து உள்ளார்.
இரண்டு மாநிலங்களில் முதல்வராக பதவி வகித்துள்ள பெருமைக்குரியவர். மாநில அரசில் பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். 1986 -87 ல் ராஜிவ் அமைச்சரவையில், வெளியுறவுத்துறைஅமைச்சராகவும், 2007 – 2009 ல் ஆந்திர கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.
ஆரம்பத்தில் பிரஜா சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 1963 ல் காங்கிரசில் இணைந்தார். 1995 ல் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி துவக்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சாக்கேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிறந்தநாளான இன்று(18 அக்., 2018) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Discussion about this post