பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நிக்கி கல்ராணி, அதா ஷர்மா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ள அதா ஷர்மா இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.
ஷக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்தில் நடிப்பதோடு டைட்டில் பாடலையும் அதா ஷர்மா பாடியுள்ளார். தற்போது இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்துத் தெரியவந்துள்ளது. சாரா என்ற சைக்காலஜி மாணவியாக நடித்துள்ள இவர் மிகவும் விளையாட்டுத்தனமாக வலம் வருகிறார். அவரது செய்கைகள் வித்தியாசமாகவும் திரைக்கதையை நகைச்சுவையாக நகர்த்திச் செல்வதாகவும் உருவாகிவருகிறது. மற்ற மொழிப்படங்களில் இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை.
1997ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘மை பெஸ்ட் பிரெண்ட்ஸ் வெட்டிங்’(My Best Friend’s Wedding) படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பாதிப்பிலேயே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது நண்பன் மேல்கொண்ட நட்பு காதலாக தோன்ற அதிரடியாகத் திருமணத்தை நிறுத்தி குழப்பம் விளைவிக்கும் கதாபாத்திரத்தில் ஜூலியா நடித்திருப்பார். காமெடி, டிராமா கலந்து உருவான அந்தப் படத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு அவரது கதாபாத்திரம் முக்கிய காரணமாக இருக்கும். அந்த கதாபாத்திரத்தையே தனக்கான முன்னுதாரணமாக கொண்டு இந்த படத்தில் அதா ஷர்மா நடித்துள்ளார்.
Discussion about this post