நானா படேகர் ஒரு அநாகரிகமான பேர்வழி என்றாலும், நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியது போல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டில் ஹார்ன் ஓகே பிளீஸ் (‘Horn OK Pleassss’) என்ற படப்பிடிப்பின்போது, நடிகர் நானா படேகர், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த நானா படேகர், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் மூலம் தம்மை துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நானா படேகர் ஒரு அநாகரிகமான பேர்வழி என்றாலும், நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியது போல பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
இந்நிலையில், அமராவதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, நடிகர் நானா படேகர் அநாகரிகமான பேர்வழி என்றும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்யக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பார் என தாம் கருதவில்லை என்றும், இத்தகைய மீடூ புகார்கள் எரிபொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது என்றும் ராஜ்தாக்கரே கூறினார்.
Discussion about this post