விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது.
அர்ஜுன்ரெட்டி என்ற படத்தின் மூலம், தமிழகம் மட்டுமின்றி இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது நன்கு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக திகழ்கிறார்.
இவரது அடுத்த படம் தெலுங்கு இயக்குனர் கிரந்திமாதவ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தனுசுடன் வடசென்னை படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தற்போது நல்ல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தெலுங்கில்முதல் படத்திலேயே விஜய் தேவரகொண்டாவுடன் அறிமுகமாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுக்கில்அறிமுகமாகும் படத்தின் பூஜை நடைபெற்றது. அப்போது விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்தசெல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.
இப்படத்தில் ராஷிகண்ணா மற்றொரு நாயகியாக நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா ஆகிய இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் உருவாக உள்ளது.
Discussion about this post