ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்கார் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் பாதிப்பை வைத்து தான், சர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் அமைத்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், முதல் பாதியில் கொஞ்சம் வில்லத்தனமாக விஜய் நடித்துள்ளதாகவும் அதனால் இப்படத்திற்கு வில்லாதி வில்லன் என முதலில் தலைப்பு வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு பின்னரே, சர்கார் என தலைப்பு வைத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.
Discussion about this post