விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி நடித்த சர்கார் படம் நவம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்காக, படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள், வெளிநாடுகள் மற்றும் டிஜிட்டல் உரிமம் என 200 கோடி ரூபாய்க்கு சர்கார் படத்தை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கேரளாவில் மட்டும் தியேட்டர் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வினியோக உரிமையை இன்பரா இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் பலத்த போட்டிகளுக்கிடையே வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சர்கார் படத்தை வெளியிடும் உரிமையை வல்லபனேனி அசோக் என்ற நிறுவனம் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post