அவன் இவன் படம் மூலம் இயக்குனர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜனனி. இப்படத்தை அடுத்து ‘தெகிடி’, பலூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்திறவன் கிட்ட கம்முனும் இருந்தால் வாழ்க்கை ஜம்முனுக்கு இருக்கும் என்று விஜய் பேசியது எனக்கு பொருந்தியது. நான் அப்படித்தான் இருப்பேன் என்றார். மேலும், விஜய், அஜித் இரண்டு பேரையும் பிடிக்கும் என்றும் ஒரே நேரத்தில் விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அஜித் படத்தில்தான் நடிப்பேன் என்றார்.
Discussion about this post