கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா’, அச்சம் என்பது மடமையடா ஆகிய இருபடங்களில் சிம்பு நடித்திருந்தார். தற்போது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார். அதிலும் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக, இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால், அதற்கு மாவதவன் மறுக்க, முதல் பாகத்தில் நடித்த சிம்புவே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்திருக்கிறார். எனவே, கவுதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரும் 3வது முறையாக இணைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது சுந்தர்.சி, வெங்கட் பிரபு ஆகியோர் படத்தில் நடித்து வரும் சிம்பு, அந்த படங்களின் பணிகள் முடிந்த பின்னரே, கவுதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post