விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அடுத்ததாக, விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி தீபாவளிக்கு பின்னர் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தான். சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
Discussion about this post