சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கும் அந்த படம் இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
வினோத் அதற்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக தெரிகிறது. அமித்தாப் பச்சன், டாப்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்த பிங்க் படத்தை பலரும் பாராட்டி இருந்தனர். மேலும் பல்வேறு விருதுகளையும் அப்படம் குவித்திருந்தது. அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post