’உள்ளே ரெண்டாயிரம் ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குது, அதுல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சம்பழத்துல ஓடப்போவுது? ஒங்க சென்டிமெண்டுக்கெல்லாம் ஒரு அளவே கிடையாதாய்யா?’ விவேக்கின் செம்ம டயலாக், இது அப்படியே பொருந்திப் போயிருக்கிறது மாஸ் அண்டு கிளாஸ் நடிகர் விஜய் சேதுபதிக்கு.
செக்க சிவந்த வானம், 96 என அடுத்தடுத்து ஹிட்ஸை அள்ளித் தட்டிக் கொண்டிருக்கும் வி.எஸ்.க்கு அடுத்து ரிலீஸாகிறது ‘சீதக்காதி’. இதுவரையில் எக்ஸ்ட்ரா மேக் அப் இல்லாமல் யதார்த்த லுக்கிலேயே பின்னிப் பெடலெடுத்த வி.எஸ். இந்த படத்திற்காக 80 வயது முதியவர் வேடம் போட்டு அசத்தியிருக்கிறார். ஆஸம் அவார்ட்ஸ் பல நிச்சயம்! என்று இப்போதே படத்தின் க்ரூ கெத்தாக வாழ்த்திக் கொண்டிருக்கிறது மனுஷனை.
ஆனால் மேட்ட அது இல்லை. இந்தப் படத்தில் முதிய விஜய் சேதுபதியின் ஜோடியாக பழைய நடிகை அர்ச்சனா நடிக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் ரம்யா நம்பீசனும் இருக்கிறார்.
இந்த கேரக்டருக்கு ரம்யா எதுக்குய்யா? என்று தயாரிப்பு தரப்பை சிலர் கேட்க, அவர்களோ நாயகனை கைகாட்டியுள்ளனர். ஆம்! விஜய் சேதுபதிதான் வேண்டி விரும்பி, ரம்யா நம்பீசனை கேட்டாராம். காரணம்? சக்ஸஸ் சென்டிமெண்டுதான் வேறொன்னுமில்லை.
ஏற்கனவே ரம்யா தன்னுடன் நடித்த, பீட்ஸா! சேதுபதி! இரண்டு படங்களும் மாஸ் மெகா ஹிட். விஜய்சேதுபதியின் சினி கேரியரில் பெரும் பிரேக் மற்றும் திருப்புமுனையை கொடுத்த படங்கள் அவை. அதனால் ர.நம்பீசனை தனது லக்கியஸ்ட் ஹீரோயினாகவே நினைக்கிறார் வி.எஸ். அதனால்தான் இந்த சிபாரிசாம்!
என்னாங்கடா உங்க சென்டிமெண்டு? என்று ஒரு பக்கம் இது தெரிந்தாலும் கூட ரம்யாவும் திறமையான நடிகை என்பதை மறுப்பதற்கில்லையே!
ஷார்ட் அண்டு ஸ்வீட் பப்ளி மட்டுமல்ல, அவிடெ பூமியில் திலீப் ஏட்டனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தெறிக்கவிடும் நடிகைகளில் ரம்யூ முன்னணியில் அல்லவா நிற்கிறார்.
நீ தெறி பேபி!
Discussion about this post