* விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தின் விற்பனை இருநூறு கோடியை தாண்டியிருக்கிறதாம். இதனால் இளைய தளபதி இனிப்பான ஃபீலிங்ஸில் இருக்கிறார் என்று மட்டும் யாரும் எண்ணிவிட வேண்டாம்.
காரணம், படத்தின் இயக்குநர் என்னதான் ஹிட் இயக்குநராக இருந்தாலும் கூட அவரது கடைசி படமான ‘ஸ்பைடர்’ மரண மாஸ் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ்பாபு இருந்தும் கூட செமத்தியான அடி.
இதுதான் விஜய்யின் பயமே. ஒருவேளை சர்க்கார் ஓடவில்லை என்றால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தன் கழுத்தில் கத்தி வைப்பார்களே! என்பதுதான். ஏற்கனவே முன்பு தன் சில படங்கள் தோல்வியடைந்தபோது நஷ்டத்தில் பங்கை ஏற்றுக் கொண்டது போல் இப்போதும் பண்ண வேண்டி வருமோ? என்று பயப்படுகிறார்.
(கலெக்ஷன் ஜம்முன்னும், படம் கம்முன்னும் இருந்தால், பயம் கும்முன்னு வரத்தானே செய்யும்?)
* நடிக்க வாய்ப்பு கேட்டுப் போன தன்னை செக்ஸியாக போஸ் கொடுக்க வைத்து ரசித்தார்! பிறகு…என்று ராகவா லாரன்ஸுக்கு சுளுக்கெடுத்திருந்தார் அக்கட நடிகை ஸ்ரீரெட்டி. துவக்கத்தில் அதை மறுத்தாலும் கூட அதன் பின் ஸ்ரீயுடன் சமரசம் பேசி செட்டில் பண்ணிவிட்டார் லாரன்ஸ். தனது படத்தில் வெயிட்டான ரோல் கொடுத்து, அதற்கான முன்பணமும் கொடுக்கப்பட்டு விட்டதாம். ஸ்ரீ செம்ம ஹேப்பி.
இப்போல்லாம் லாரன்ஸ் மாஸ்டரை எவனாச்சும் தப்பா பேசினா ‘அரேய் கொங்கட கொடுக்கா! நேனு ராட்சஸிடா…’ என்று பேயாய் பாய்கிறார் ஸ்ரீ. எல்லாம் மாஸ்டர் மேல் வந்திருக்கும் புது அன்பும், மரியாதையும், இத்யாதிகளும்தான்.
(ஹும்! அப்படி என்னதான் ஸ்டெப்ஸ் போட்டு மயக்கினாரோ லாரு மாஸ்டர்?)
* செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றி, இயக்குநர் மணிரத்னத்தை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. அதனால் காதல் கதைகளை தூக்கிக் கடாசிவிட்டு, மனிதர் மீண்டும் ஆக்ஷன் ஜானருக்குள் கால் வைத்திருக்கிறா அழுத்தமாக. அடுத்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டை முடித்துவிட்டார் அண்ணன்.
இதில் நடிக்க அவர் எதிர்பார்ப்பது பெரிய தலைகளை. ஆம் ரஜினி, கமல் இருவரையும் ஒன்றாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட மணிக்கு மீண்டும் இந்த ஆசை துளிர்த்திருக்கிறது. கமல் சைடில் இந்த கதையை சொல்லிவிட்டார், ஆனால் ரஜினியின் காதுகளுக்கு ஒன்லைன் கூட போகவில்லை.
கதை கேட்ட கமலும் அப்படியொன்றும் இம்ப்ரஸாகி ஓ.கே. சொல்லவில்லையாம். இதில் மணி அப்செட். ஒருவேளை ரஜினியிடம் கதை சொல்லி, அவர் ஓ.கே.செய்துவிட்டால் கமல் இடத்தில் மீண்டும் ‘தளபதி’ மம்மூட்டி அல்லது மோகன்லாலை நடிக்க வைக்கும் எண்ணம் இருக்கிறதாம் மணியிடம்.
(நயன்தாரா இல்லேன்னா பழைய நமீதாவுக்கே போன் போடுவோம் பாஸு! யாருகிட்ட?)
* ஏ.ஆர்.ரஹ்மானின் ஆல்பங்கள் இப்போதெல்லாம் பெரிதாய் ஹிட்டடிப்பதில்லை! என்று சில குறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிக்கின்றன. எனவே வழக்கமாக ஸ்கிரிப்ட் ரெடியானதும் அவரிடம் போய் நிற்கும் ஷங்கர் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் சிலர் இப்போது ரஹ்மானை சில நாட்களுக்கு விட்டுப் பிடிக்கலாம் எனும் மூடுக்கு வந்துவிட்டனர்.
அதன் வெளிப்பாடே இந்தியன் – 2வில் அனிருத்! என்கிறார்கள்.
(இசையை விளக்குறப்ப அப்படியே ஆன்ட்ரியாவோட லிப்பை பற்றியும் கமலுக்கு விளக்கிடுங்க அனி!)
* அடிமடத்திலிருந்து தெறியாய் முன்னேறிய நடிகர்கள் சிலர், பேட்டிகளில் தாங்கள் எழுந்து வந்த கதையையும், பட்ட கஷ்டங்களையும் சொல்வதை ‘ஈகோ சிக்கல்’ ஆக நினைப்பார்கள்.
ஆனால் விஜய் சேதுபதியும், சிவகார்த்தியும் இதற்கு விதிவிலக்கு. இன்றைக்கு தயாரிப்பாளர்களின் ப்ராமிசிங் ஹீரோக்கள் இவர்கள் இருவரும்தான்.
இந்நிலையில் டி.வி. சேனல் ஒன்று விஜய் சேதுபதியையும், சிவகார்த்தியையும் இணைத்து வைத்து ஷோ நடத்தியிருக்கிறது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டனர். அதிலும் சிவா சில படிகள் மேலே போய் வி.எஸ்.ஸை கொண்டாடிவிட்டாராம்.
(கத்துக்கணும் சிவா தம்பி! உங்க கிட்ட இருந்து பெரியாளுங்க நிறைய கத்துக்கணும்.)
Discussion about this post