தமிழ் சினிமாவின் தெறி பேபி ஆன்ட்ரியா. நடிகை, பாடகி, இசையமைப்பாளர், கவிஞர் என்று பின்னிப் பேர்த்தெடுக்கும் பொண்ணு! ஹாட் பேபியும் கூட. திடீரென தமிழ் ரசிகப்பயபுள்ளைங்க மேலே திடீர்ன்னு இரக்கம் வந்து தன்னோட காஸ்ட்யூம் விஷயத்துல இறக்கம் காட்டி கிறக்கமாக்கும் பாருங்க, சுருக்கமா சொல்றதா இருந்தா ஆல் மேட்டர்களிலும் ஆஸம்யா!
செலக்டீவாகதான் படம் பண்ணுது பொண்ணு. அதிலும் தனக்கு கெத்து கேரக்டர் இருந்தால்தான் கையெழுத்தே போடுது அக்ரிமெண்டில்.
இப்டியிருக்க, சமீபத்தில் ஒரு இயக்குநர் ஆண்ட் பேபியிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். பக்கா ஹீரோயின் சப்ஜெக்ட். அதிலும், போலீஸ் ஸ்டோரி. கதையும், காட்சிகளும் பொண்ணுக்கு டபுள் ஓ.கே. எல்லாம் முடிஞ்சு ‘எப்போ வெச்சுக்கலாம் பேப்பர்ல கையெழுத்து போடுற பார்மாலிட்டிகளை?’ என்று இயக்குநர் கேட்க, ஆன்ட்ரியாவோ, அதுக்கு முன்னாடி பேமெண்ட் பத்தி பேசியிருக்குது. தயாரிப்பு தரப்பும் என்ன மேடம் எதிர்பார்க்கிறீங்க? என்று கேட்க, ஆன்ட்ரியா கேட்டதோ அம்மாடியோவ் சம்பளம்.
ஆமாங்க ஒன்றரைக் கோடி கேட்டாராம். பேயடித்துவிட்டது தயாரிப்பாளருக்கு. ‘ஏன் இவ்வளவு?’ என்றதும், தனக்கென தனி ரசிக பட்டாளம் இருப்பதையும், ஸ்க்ரீனில் தான் வந்தாலே கிடைக்க கூடிய ரெஸ்பான்ஸையும் பேபி அள்ளிவிட்டு அதகளமாய் பேசியிருக்கிறது.
எல்லாவற்றையும் அடக்கமாக கேட்டுவிட்டு தயாரிப்பாளர் சொன்ன பதிலால் ஆன்ட்ரியா ஆங்க்ரீ பேர்டு ஆகிவிட்டார். அப்படி இன்னாதான் பா சொன்னாரு தயாரிப்பாளர்? என்கிறீர்களா…
“ஒங்களுக்கு ஒன்றரை கோடி கொடுத்து நல்ல படமெடுக்குறதுக்கு பதிலா, லோ பட்ஜெட்ல ஒரு மொக்க படத்தை எடுத்து, அதுல ஒரு கோடி கொடுத்து நயன் தாராவை கேமியோ ரோல் பண்ண வெச்சு படத்தை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிடுவேன். அந்தம்மா நடிச்சா எந்தப்படமும் ஹிட்டுதான்.” என்றுதான்.
இதைக்கேட்டா ஆன்ட் பாப்பா ஆங்க்ரீ பேர்டு ஆகாம, லவ் பேர்டாவா மாறும்!?
Discussion about this post