வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது தங்கள் பலத்தை நிரூபித்திட, அனைத்து கட்சிகளுமே கடுமையாக வியூகம் வகுத்திருக்கின்றன. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றின் போது ,திமுக சட்டசபை உறுப்பினர் வாகை சந்திரசேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை புகழ்ந்திருக்கிறார்.” ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வரும் ரஜினி,கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ சிறந்தவர் ”என அவர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் போது தேமுதிகவுடன் கூட்டணி வைக்கதான் அவர் இப்படி அடி போட்டிருக்கிறார் என ,அவரின் பேட்டி குறித்து கிசுகிசுக்கிறது அரசியல் வட்டாரம்.
Discussion about this post