KTM Duke-125 பைக்கின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி உள்ளது. KTM நிறுவனம் இந்தியாவில் புதிய 125cc Duke பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி தற்போது KTM 125cc Duke பைக்கிற்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
புதிய 125cc Duke மாடலுக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விலையை பொருத்த வரை Duke 125cc-ன் விலை அதிகபட்சம் ரூ.1.30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
125cc Duke மாடல் இந்தியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் KTM 125cc duke மாடலின் விலை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post