சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.
6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படத்தின் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Discussion about this post