கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி குற்றம் சாட்டி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற திரையுலகிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூதாகரமாக வெடித்துள்ள இந்த குற்றசாட்டுகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் குற்றச்சாட்டு குறித்து அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றிய டைரக்டர் பாரதிராஜாவிடமும், இசைஞானி இளையராஜாவிடமும் கேட்கப்பட்டது.
அவர்கள் கூறியதாவது:இதற்கு பதிலளித்த பாரதிராஜா “என் தொழில் தொடர்பாக சினிமா தொடர்பாக எது கேட்டாலும் பதில் சொல்வேன். ஒரு இயக்குனராக பாலியல் புகார்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா “மீ டூ என்றால் என்ன? சொல்லு. மீ டூன்னா என்னா? என்ன பிரச்சனை? என்ன பிரச்சனை” என கேள்வி கேட்டவரிடம் கோபப்பட்டார்.
மற்றொரு பத்திரிகையாளர், ‘வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறதே?’ என கேள்வி எழுப்ப “நீ பாத்தியா? நீ பாத்தியா? கேள்விப்பட்டிருக்கிறேன் என்று அவர் கூறினார்… கேள்விபட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் பதில் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். இளையராஜாவிடம் மீடூ பற்றி கேள்வி கேட்டதற்கு ’ரொம்ப நன்றாக கேள்வி கேட்கிறாய்’ என்று சொல்லி விட்டு பதில் அளிக்காமல் மறுத்து சென்றுவிட்டார்.
Discussion about this post