சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10லைட் ஸ்மார்ட்போன் ஆனது சிஇஎஸ் 2020 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு ரூ.35,990-விலையில் விற்பனக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ப்ராசஸரின் தயாரிப்பை பற்றி சாம்சங் எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால்முன்னர் வெளியான லீக்ஸ் தகவல்களோ இதில் இருப்பது எக்ஸினோஸ் 9810 என்று தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் சந்தைக்கு ஏற்ப சிப்செட் மாறுபடலாம் என எதிர்பார்கக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
Discussion about this post