இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான ‘கூகிள் நவ்’-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டில் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறலாம்.
உங்கள் மொபைலில் உள்ள ஓலா, உபேர், மியூசிக் மற்றும் வீடியோ போன்ற சில குறிப்பிட்ட ஆப்களை உங்கள் குரல் மூலமாகவே இயக்க முடியும். எடுத்துக்காட்டாக “தர்பார் படம் மாலை காட்சி டிக்கெட்” என்று ஆங்கிலத்தில் கூறினால் போதும் வேலை முடிந்துவிடும்.
அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் காலத்தில், கீபோர்டில் டைப் செய்வதற்கு பதிலாக வாய்ஸ் கொடுப்பதன் மூலம் இந்த முறை இயக்கப்படுகிறது. வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் யாரும் முழுதாக டைப் செய்ய விரும்புவதில்லை அதற்கு பதிலாக பேசிக் கொள்ளும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்தியாவில் அன்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அறிவிப்பை வெளியிட்டது, அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,பெங்காலி, இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் உருது அகிய மொழிகளில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் சேவையினை உலகம் முழுக்க சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட சுமார் 10 கோடிக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருந்தது.
Discussion about this post