சபரிமலை சன்னிதானத்திற்குள் இருமுடி கட்டிக்கொண்டு செல்ல முயன்ற ரெஹனா பாத்திமா யார் என்பதை பற்றிய முழு விவரத்தை பார்ப்போம்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான ரெஹனா பாத்திமா அரசு ஊழியராக பணியாற்றியவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர், மாடலாகவும், சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர், மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு எதிராக ரெஹனா பாத்திமா போராடினார். எனது உடல், எனது உரிமை என்பதை உணர்த்தும் விதமாகவும் ஆசிரியருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், தர்பூசணியுடன் மேலாடை அணியாத தனது அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த 2014ம் ஆண்டு KISS OF LOVE என்ற பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார். கடந்த 2016ம் ஆண்டு திருச்சூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டார்.
அவரது கணவர் மனோஜ் இயக்கிய ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய EKA என்ற திரைப்படத்தில் ரெஹனா பாத்திமா நடித்துள்ளார்.
Discussion about this post