செக்ஸை, செவ்வனே கதையாக்கும் சர்ச்சை இயக்குநர் சாமியின் ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா அறிமுகமானபோது அந்த மாதிரி நடிகை என்றுதான் முத்திரை குத்தப்பட்டார். ஆனால் தமிழ் சினிமாவின் மைல் ஸ்டோன் படமான ‘மைனா’ அவரது வாழ்க்கையை மாற்றிக் காட்டியது.
ஒரு அடல்ட்ஸ் ஒன்லி ஜானரிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ரியாலிட்டி சினிமாவுக்கு ஜானருக்கு அமல் தன்னை மாற்றிக்கொண்டு சாதித்ததே பெரிய விஷயம்.
மைனாவுக்கு பிறகு அமலாபாலின் பர்ஷனல் மற்றும் பட வாழ்க்கை தாறுமாறாக தாவி ஏறியது. தென்னிந்தியாவின் மாஸ் ஹீரோ விஜய்க்கு அவர் ஜோடியானதும், தேசிய அளவில் அறியப்படும் தனுஷுக்கு அவர் ஜோடி, தோழியானதும் இதற்கிடையில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை லவ்வி, திருமணம் செய்து கொண்டதும் சினிமேட்டிக்கான யதார்த்தங்கள்.
அமலா பால் – ஏ.எல்.விஜய் உறவு பிரிவுக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அந்த அழகு காதல் ப்ரோக்கன் ஆனது பெரிய துயரமே.
இதன் பின் அமலாவின் பாதை தடுமாறும்! என பலர் நினைத்தார்கள். அவர் பிக் செய்த படங்களும், அதில் அவரது காஸ்ட்யூம்களும் அதிரத்தான் வைக்கின்றன. ஆனாலும் பொண்ணு பின்னி எடுத்துத்தான் மேலேறிக் கொண்டிருக்கிறது. ராட்சஸனின் வெற்றி அமல்ஸை மேலும் அழகாக்கி இருக்கிறது, பக்கா பிட்னஸாக தனது உடம்பைக் கொண்டு செல்வதும், தன்னை நோக்கி வரும் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் விஷயங்களுக்கு தைரியமாக ரியாக்ட் செய்வதும், கதையின் தேவைக்காக எந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கிக் கிறங்கடிப்பேன் என்பதும் அவரை நோக்கி ஆச்சரியமாக பார்க்க வைக்கின்றன.
விவகாரத்துக்குப் பின் மறு விவாகத்துக்கு ஏ.எல்.விஜய் தயாராகிவிட்டார். ஆனால் அமல்ஸோ எதைப் பற்றியும் கவலையில்லாமல் தன் வாழ்க்கையை செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
என்னதான் சர்ச்சை நாயகியாக இருந்தாலும் இந்த சக்ஸஸ் நாயகியை பார்த்து அழுத்தமாய் சொல்வோம் ஒரு ‘ஆஸம்’ன்னு.
– எஸ்.நிஷா
Discussion about this post