பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்றும், சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்தநிலையில் பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்தது. 15 நாட்களுக்கு முன்பே சூட்டிங்கை முடித்தற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் படக்குழுவுக்கு நன்றி.
அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் எனவும் நடிகர் ரஜினிகாந்த் டுவிட் செய்துள்ளார்.
Discussion about this post