தமிழ் சினிமாவில் இப்படியொரு இடத்துக்கு வந்து நிற்போம்! என்று சத்தியமாக நினைத்திருக்கமாட்டார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்தியின் ஸ்வீட் டார்லிங், சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் உடன் ‘பைரவா, சர்க்கார்’, விஷாலுடன் ‘சண்டாக்கோழி-2’, என்று கெளப்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஏகப்பட்ட மெகா பட்ஜெட் புதுப்படங்களில் அவர் அவர் புக் ஆகும் வாய்ப்பும் அமோகமாக இருக்கிறது. இந்நிலையில் சர்க்கார்-க்கு பிறகு இரண்டு மாதம் உழைப்புக்கு ஓய்வு கொடுத்துள்ளார் கீர்த்தி.
இந்த நேரத்தில் பொண்ணு எங்கே போகுது? என்ன பண்ண போகுது? என்று கேட்டால் அவரே வாய்திறக்கிறார்…” எந்த நாட்டுக்கும் போகமாட்டேன் எங்க வீட்டுலதான் இருக்கப்போறேன். தலைமுடியில் கேர் எடுத்துக்கப்போறேன், முடிக்காம விட்டிருக்கிற கவிதைகளை எழுதி முடிக்கப்போறேன். இதையெல்லாம் தாண்டி என்னோட பேவரைட் வேலையான சமையல்ல அசத்தப்போறேன்.” என்கிறார்.
கீர்த்திக்கு சமைக்க வருமா?…என்று எக்குத்தப்பாக யாரும் கேட்டு வெச்சுடாதீங்க. செம்பருத்தி (ச.கோ-2 வில் கீர்த்தியின் பெயர் இதுதான்) செக்க செவந்து டென்ஷனாயிடும். காரணம்? சைவம், அசைவம், சைனீஸ்ன்னு பொண்ணு சமையல் பின்னியெடுக்கும். ‘இதுதான்னு இல்லை நான் என்ன சமைச்சாலும் அது நல்லா இருக்கும்!ன்னு என் பேமிலியில எல்லாரும் சொல்வாங்க.’ன்னு கீர்த்தியே தன் கீர்த்தியை பத்தி புகழ் பேசியிருக்குது.
அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க, பொதுவா அஜித்தான் தன்னோட பட ஷூட்டிங்ல திடீர்ன்னு சமையல்ல இறங்கி அசத்துவார். மொத்த யூனிட்டுக்கும் சமைச்சுப் போட்டு சந்தோஷப்படும் தல.
கீர்த்தியும் இப்படித்தான் ஒரு நாள் சண்டக்கோழி -2 ஷூட்டிங்ல சமைச்சார். ஆனா அது எல்லாருக்கும் இல்ல ஜஸ்ட் விஷால், இயக்குநர் லிங்குசாமி ரெண்டு பேருக்கும்தான். கிராமத்துல ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்ப அம்சமா கீரைக்குழம்பு செஞ்சு அசத்தியிருக்குது பொண்ணு. ’சைவம்னாலும் செம்மயா இருக்கே கீர்த்து!’ன்னு விஷால் கிறுகிறுத்துட்டாராம்.
விஷாலுக்கு கீரைக்குழம்பு, அப்போ விஜய்க்கு என்ன குழம்பு கீர்த்தி?!….
– எஸ்.நிஷா
Discussion about this post