போன சிவாஜி பிறந்தநாளைக்கு தேவையில்லாம டைம்ஸ் ஆப் இண்டியாகாரங்க, சிவாஜி அரசியல் ஜொலிக்காதது பற்றி கட்டுரை எழுதியிருக்காங்க..
அது ஒரு மேட்டரை ரீவைண்ட் பண்ணியிருக்காங்க.
1970கள் துவக்கத்தில் லயோலா காலேஜ் மாணவர்கள் நிதி திரட்ட நடிகர் சங்கம் மூலம் ஸ்டார் நைட் நடத்தி னாங்க. அதுல எம்ஜிஆரும் சிவாஜியும் கலந்து கிறாங்க..
ஸ்டார் நைட்ஸ் கட்டணமாக மாணவர் சங்கம், பத்தாயிரம் ரூபாயை நடிகர் சங்கத்திடம் கொடுக்க வேண்டும். நடிகர் சங்கதலைவராக இருக்கும் சிவாஜியிடம் செக் காக கொடுக்கிறார் மாணவர் சங்க தலைவர் ஜேசிடி பிரபாகரன்.
பின்னர் எம்ஜிஆர் விழாவில் பேசுகிறார். ”மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்கிறார்கள் அவர்களிடம் காசு வாங்கி நாங்கள் அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்ப வில்லை. மாணவர் சங்கம் கொடுக்கும் பணத்திற்கு பதிலாக நானே எந்த சொந்தப்பணத்திலிருந்து நடிகர் சங்கத்திடம் கொடுக்கிறேன்” என்று சொல்ல, கை தட்டல் அள்ளிக்கொண்டுபோனது.
இப்போ நாம மேட்டருக்கு வருவோம். அந்த மேடையில் சிவாஜி நிலைமை யை யோசித்து பாருங்கள். நடிகர் திலகத்திற்கு, உண்மையிலேயே தில்லாலங்கடி அரசியல் சுட்டுப்போட்டாலும் வராது. பாவம் அவர். காங்கிரஸ் தன்னை உயர்த்தும் என்று நம்பிய ஒரு அப்பாவி.
எம்ஜிஆர் அப்படி அல்ல. அள்ளி அள்ளி கொடுக்கும் அவரிடம், சிலமுக்கியமான நேரங்களில் எங்கே யாரை எப்படி வீழ்த்தி தன்னை முன்னிலைப்படுத் திக்கொண்டு செல்வாக்கை அதிகரித்து கொள்ள வேண்டும் என்பதை கச்சிதமாக செய்வார்.
தன்னுடன் பயணித்த மாபெரும் திமுக தலைவர்களை யெல்லாம் அசால்ட்டாய் ஓரம்கட்டிய கலைஞர், எம்ஜிஆர் இப்படி கட்டமைத்த மக்கள் செல்வாக்கை சமாளிக்க முடியாமல்தான் அரசியலில் திணறினார்.
Discussion about this post