முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று படம் திரைக்க வர உள்ளது.
இப்படத்தின் பட்டையை கிளப்பும் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கார்பரேட் உயரதிகாரியாக வேலை பார்க்கும் விஜய் ஓட்டு போடுவதற்காக இந்தியா திரும்புகிறார். ஆனால் அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் பொங்கி எழும் விஜய் தமிழ் நாட்டு அரசியலில் காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறார். அடுத்தடுத்து தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போடும் அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார். அரசியல்வாதிகளுக்கு எப்படி ஆட்டம் காண்பிக்கிறார் என்பதே டீசர் மூலம் படத்தின் கதையாக தெரிகிறது.
தீபாவளிக்கு பட்டாசுக்கு போட்டியாக பட்டையை கிளப்பும் என்பத டீசரிலிருந்தே தெரிகிறது. இதுவிஜயின் தீபாவளியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Discussion about this post