ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி , அரசியல்வாதி பழ.கருப்பையா, ராதா ரவி உட்பட பலரும் நடித்துள்ள படம் சர்கார், இந்த படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் டீசரை, யூடிப்பில் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர் வெளியிட்டது. 1.33 நிமிடம் ஓடக் கூடிய சர்கார் டீசர், இணையத்தையே கிடுகிடுக்க வைத்தது.
இந்த டீசரில் விஜய்யின் அசத்தல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் பேசும் வசனம் இணையத்தில் தெறிக்க விட்டுள்ளனர் தளபதி ரசிகர்கள். மேலும், உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார் என விஜய் அரசியல் வசனம், பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்கார் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பேர் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
Discussion about this post