தி.மு.க.வைத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று நாடகம் ஒன்றைத் தயாரித்து, தானே நடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தவர் சோ. அதற்குப் பதிலடியாக ஒரே நாளில் ‘நானே அறிவாளி’ என்ற நாடகத்தை எழுதி, அதனை அரங்கேற்றி எதிரிகளின் பிரச்சாரத்தை முறியடித்தவர் கலைஞர் என கி.வீரமணி கூறியுள்ளார்.
திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரையில் செய்தியாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டியில்… 1971 இல் சோ அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தி, கலைஞரை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்பதற்காக தி.மு.க.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது. அதேநேரத்தில், ஒரே நாளில் கலைஞர், ‘‘நானே அறிவாளி” என்ற ஒரு நாடகத்தை எழுதி, அதை தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தினார். அது மிகப்பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தியது.
அதுமட்டுமல்லாமல், ராமர் பிரச்சினையை பெரிதாக ஊதினார்கள். அப்படி ஊதியவுடன், இவர்கள் சொல்லக் கூடிய ‘அறிவாளிகள்’ எல்லாம் ஒன்றாக சேர்ந்தார்கள். அப்படி சேர்ந்த பிறகுதான், திராவிட முன்னேற்றக் கழ கத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் 183 இடங்கள் கிடைத்தன.
அவர் சொல்லுகின்ற ‘அறிவாளிகளுடைய’ முடிவு என்னாகும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம். எனவே, அந்த ‘அறிவாளிகளை’ நம்பி இவர் இறங் கினால், இவருடைய கதியும் அதேதான் எனக் கூறியுள்ளார்.
Discussion about this post