மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பது அவருடைய முடிவு. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை என ஆவேசமாக மன்னிப்பு கேட்க சொன்ன வீரமணி ஜாகை வாங்கியுள்ளார்.
தேவையில்லாத வகையில் தன் னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விளக்கம் சொல்லு வதாக நினைத்துக்கொண்டு, குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்கிறார் மீண்டும். குறிப்பாக சொல்லவேண்டு மானால், அந்த விழாவிலே அவர் பேசியது ‘துக்ளக்’கைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் துணிந்து அதை எழுதவில்லை என்றுதான் அவர் பேசினார்.
இப்போது இன்னொரு பத்திரிகையை எங்கேயோ தேடிக் கண்டுபிடித்து தவறான தகவலை வெளியிட்ட ஒரு பத்திரிகை அது. நிர்வாணமான படமோ எதுவும் கிடையாது. எனவே, செருப்பு மாலை போடப்பட்டது கிடையாது என்பது சேலம் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தெளிவாகத் தெரியும்.அதுமட்டுமல்ல, அவர் சொன்னதையே அவர் மறுக்கிறார்.
ஆனால், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பது அவருடைய முடிவு. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. பெரியாரைப்பற்றி விமர்சனம் எத்தனையோ பேர் செய்து விட்டார்கள். ஆனால், பெரியாரை விமர்சித்த வர்கள் காணாமல் போய்விட்டார்கள். பெரியார் எப்போதும் நின்று கொண்டிருக்கிறார்.
பெரியார் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு இவைகள் எல்லாம் அடையாளங்கள். இன்னும் அவர் நிறைய பேசவேண்டும் இதுமாதிரி. அதை வரவேற்கிறோம் என இவ்வாறு கூறியுள்ளார்.
Discussion about this post